search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் மாயம்"

    • கணவன், மனைவி இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் கோர்ட்டில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
    • கோவிலில் தேடி கொண்டிருந்தபோது, அங்கு தாரணியின் கைப்பை செல்போன், செருப்புகள் கிடந்தது.

    கோவை:

    கோவை கருமத்தம்பட் டியை சேர்ந்தவர் தாரணி (29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் ஆனது. சுரேஷ்குமார் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார்.

    இதையடுத்து திருமணம் ஆனதும், தனது மனைவியை அழைத்துக்கொண்டு சுரேஷ்குமார் அமெரிக்கா சென்றார். அங்கு 2 பேரும் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் தாரணிக்கு உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கணவன், மனைவி இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இவர்கள் கோர்ட்டில் விவாகரத்து பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாரணி அமெரிக்காவில் இருந்து தனது சொந்த ஊரான கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கு வந்தார்.

    இங்கு தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். இங்கிருந்தபடியே தனது உடல்நலன் பாதிப்புக்கு சித்தாபுதூரில் உள்ள சித்தா மருத்துவமனை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் தனது வீட்டில் வந்து தங்கி இருந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தனது பெற்றோரிடம் சென்னியாண்டவர் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் அதன்பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடினர். கோவிலுக்கு சென்றும் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கோவிலில் தேடி கொண்டிருந்தபோது, அங்கு தாரணியின் கைப்பை செல்போன், செருப்புகள் கிடந்தது. அதனை அவர்கள் எடுத்தனர். இதுகுறித்து தாரணியின் தாய் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் அந்த வழக்கை கைவிட்டு விட்ட னர்.

    இந்த நிலையில், தாரணியின் தாய் சாந்தாமணி, தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரியும், இந்த வழக்கினை கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மாயமான பெண் வழக்கினை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண்ணை தேடும் பணியை சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடங்கினர்.

    கோவை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சிவக்குமார் மேற்பார்வையில் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் இளம்பெண்ணின் கணவர், கோவில் பூசாரி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்றைய தினம் பதிவாகி இருந்த காட்சிகளை கேட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போன பெண்களின் விவரங்களை கேட்டும் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • 2 குழந்தைகளுக்கு தாயான ஜோஸ்பின் ஷீபா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    அருமனை அருகே உள்ள இடைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வில்சன் (வயது 45). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கணவரை இழந்த 2 குழந்தைகளுக்கு தாயான ஜோஸ்பின் ஷீபா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று வீட்டில் இருந்த ஜோஸ்பின் ஷீபா, தனது மகள் ஆஷீகா (8)வுடன் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், அருமனை போலீசில் வில்சன் புகார் செய்தார். அதில், கேரள மாநிலம் மலப்புரத்தில் ஜினு என்பவருடன் ஜோஸ்பின் ஷீபா இருப்பதாகவும் அவரை மீட்டுத் தர வேண்டும் என்றும் குறிப்பி ட்டு உள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல், குழந்தைகளுடன் மாயமான ஜோஸ்பின் ஷீபாவை, போலீசார் மலப்புரத்தில் இருந்தே அழைத்து வந்த தாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி அருகே தனியார் கல்லூரி பேராசிரியை மாயம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பேராசிரியை தேடி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லதா (வயது45). இவரது மகள் ரசிகப்பிரியா (23). இவர் தருமபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் லதா தேடிபார்த்தார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ரசிகப்பிரியா மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து லதா கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தன் மகளை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பேராசிரியை தேடி வருகின்றனர்.

    • பென்னாகரம் அருகே திருமணம் ஆன 10 நாட்களில் புதுப்பெண் மாயம் ஆனார்.
    • தினேஷ்குமாரை கிழே தள்ளி விட்டுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது கீதாஞ்சலி காணவில்லை.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கொடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது27) விவசாயி. இவருக்கும் தருமபுரி மாவட்டம் செல்லமுடியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடன் கடந்த 18-ந்தேதி அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் 27-ந்தேதி அன்று கணவன்-மனைவி இருவரும் மதியம் பென்னாகரத்தில் உள்ள சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க வந்துள்ளனர்.

    பின்னர் படம் முடிந்து இருவரும் மோட்டர் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தினேஷ்குமாரின் மனைவி தனது தாய் வீட்டிற்கு வரை சென்று விட்டு பிறகு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் பென்னாகரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வாழதாசம்பட்டி ரோடு, ஏரங்காடு பட்டுபூச்சி அலுவலகம் அருகில் வந்தபோது மற்றொரு ஒரு மோட்டர் சைக்கிளில் 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் திடீரென்று தினேஷை வழி மறித்து நிறுத்தியுள்ளார்.

    பின்னர் அவர் மோட்டர் சைக்கிளில் இருந்த தினேஷ்குமாரை கிழே தள்ளி விட்டுள்ளார். அவர் எழுந்து பார்த்தபோது கீதாஞ்சலி காணவில்லை. உடனே பல இடங்களில் தினேஷ்குமார் தேடிபார்த்தபோது தனது மனைவி கிடைக்கவில்லை. இதனால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து தினேஷ்குமார் பென்னாகரம் போலீசாரிடம் சினிமா பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் என்னை கீழே தள்ளி விட்டு கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கீதாஞ்சலியையும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரையும் தேடி வருகின்றனர். திருமணம் நடந்து 10 நாட்கள் ஆன நிலையில் புதுபெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த பெண் சம்பவத்தன்று தனது 11 வயது மகன் சக்திவேல் உடன் மாயமானார்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மகே ஸ்வரன் மனைவி சத்யா (வயது 28). இவர்களுக்கு சக்திவேல், ராமர்லெட்சு மணன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரன் கடந்த 1 வருட த்துக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது முதல் சத்யா தனது 3 குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கணவன் இறந்தது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த சத்யா சம்பவத்தன்று தனது மகன் சக்திவேல் (வயது 11) உடன் மாயமானார்.

    அவரது தாய் மாரியம்மாள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இருவரை யும் தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காஜா மைதின் மகள் சூரத் நிஷா (18). இவர் உத்தமபாளை யத்தில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார். பல இடங்க ளில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தந்தை உத்தம பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    • கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி ஆர்த்தி. கடந்த 2½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மோனா ஸ்ரீ என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

    சூர்யா மற்றும் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தையுடன் பெண்ணின் தாய் நிர்மலா வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    பின்னர் மனைவி குழந்தையை பெண்ணின் தாய் வீட்டிலேயே விட்டு விட்டு சூர்யா கட்டிட வேலைக்கு பெங்களூருக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 9 -ந் தேதி சூர்யா மாமியார் வீடான கலர் வட்டத்திற்கு வந்து 3 நாட்களாக அங்கேயே தங்கினார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஆர்த்தி தன் கை குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.

    பெண்ணின் கணவர் மற்றும் பெண்ணின் தாயார் இருவரும் ஆர்த்தியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரை பெற்ற போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கை குழந்தையுடன் காணாமல் போன ஆரத்தியை தேடி வருகின்றனர்.

    மேலும் குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வராஜ் (47). இவரது மனைவி செல்வி (38) இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.
    • இந்நிலையில் கடந்த 5-ந் தேதி செல்வி தனது மகளுடன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பூலாம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவரது மனைவி செல்வி (38) இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.

    கட்டிடத் தொழிலாளியான செல்வராஜ் தற்போது திருப்பூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி செல்வி தனது மகளுடன் எடப்பாடி- பூலாம்பட்டி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். செல்வியும் கட்டிட கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 5-ந் தேதி செல்வி தனது மகளுடன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்வி மற்றும் அவரது 17 வயது மகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி. இவரது 21 வயதுடைய மகள் பிளஸ் 2 முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 29-ந் தேதி இளம் பெண் கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் இளம் பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    அவர் கிடைக்காததால் இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    • அரவிந்த் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
    • திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி:

    திருச்சி திருவெறும்பூர் நவல்பட்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 28). இவருக்கும் நவல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவமனையில் உதவி நர்சாக பணியாற்றி வரும் ஷர்மிளா தேவி (21) என்பவருக்கும் கடந்த மே 22ந் தேதி திருமணம் நடந்தது.

    பின்னர் புதுமண தம்பதிகள் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். கணவர் வீட்டில் இருந்து ஷர்மிளாதேவி தினமும் வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம்போல் அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

    பின்னர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷர்மிளா தேவியை மர்ம நபர்கள் யாரேனும் கடத்திச் சென்று விட்டார்களா? அல்லது காதல் விவகாரத்தில் கணவரை தவிக்க விட்டு ஓட்டம் பிடித்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கஸ்தூரி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மண்டபம்:

    இலங்கையில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் இழந்த 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங் குளத்தை சேர்ந்த பிரதீப் (வயது32), அவரது மனைவி கஸ்தூரி ஆகியோர் தங்களது 2 கைக்குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அதன் பின் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

    கஸ்தூரி மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. இதற்காக வாய்ப்புகளை தேடி சென்னை, திருச்சி போன்ற நகரங்களுக்கு சென்று வந்துள்ளார். இது தொடர்பாக போலீசிலும் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.அகதிகளாக வந்தவர்கள் வெளியே செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனை மீறி கஸ்தூரி வெளியே சென்றுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மாடலிங் பணிக்காக சென்னை செல்வதாக கணவர் பிரதீப் பிடம் கஸ்தூரி கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின் அவர் கணவரை தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீப் சென்னை சென்று கஸ்தூரி கொடுத்த முகவரியில் விசாரித்துள்ளார். அப்போது மனைவி கொடுத்த முகவரி தவறானது என தெரியவந்தது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பிரதீப் தனது மனைவி மாயமானது குறித்து மண்டபம் போலீசில்புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கஸ்தூரி மாடலிங்கிற்காக யாரை தொடர்பு கொண்டார்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று போலீசார் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கஸ்தூரி மாயமானது தொடர்பாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    • தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றார்
    • போலீஸ் நிலையத்தில் புகார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியை சேர்ந்த (17 வயது) இளம் பெண்.

    இவர் கடந்த 29-ந் தேதி ஆம்பூர் உள்ள தனியார் துணி கடைக்கு வேலைக் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வரவில்லை. இதுகுறித்து இளம்பெண் பெற்றோர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து நிஷா வெளியே சென்றார்.
    • மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை.

    தருமபுரி, ஜூலை.21-

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோட்டப்பட்டியை அடுத்த சிக்கலூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் நிஷா (வயது21). இவர் பி.எஸ்.சி. வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து நிஷா வெளியே சென்றார்.

    ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிஷாவை தேடி வருகின்றனர்.

    ×